Soniya Soniya

Soniya Soniya Lyrics

A.R. Rahman

Source: lrclib.net

சோனியா
சோனியா
சோனியா, சோனியா, சோனியா

சோனியா-சோனியா, சொக்கவெக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு?
ஹே சோனியா-சோனியா, சொக்கவெக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு?
காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு, அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு?

சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று

சோனியா-சோனியா, சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு?
காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு, அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு?

சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று

பூவோடு உரசும் பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால் அது சைவம்
வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
மார்போடு இழுத்தால் அது அசைவம்

புல்லில் வந்து விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின்மீது கைதீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சேர்ந்து எல்லைதாண்டுவது அசைவம்

பெண் கூந்தல்மீது பூவாகட்டா?
உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சத்தே இல்லை
மெத்தை மேல் சைவத்தில் அர்த்தம் இல்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை

சோனியா-சோனியா, சொக்கவெக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு?

உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போல அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
கையாள தெரிந்தால் கவலை இல்லை

காதல் cricket'ல் சட்டம் இல்லை, ஒரு சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை, கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூமாலை

தட்டாமல் போனால் தங்கம் இல்லை
முட்டாமல் போனால் மோகம் இல்லை
காமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை
கன்னத்தின் காயங்கள் காதல் இல்லை
பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆண் இல்லை

சோனியா-சோனியா, சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு?
காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு, அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு?

சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று

சோனியா
சோனியா
சோனியா

Crie sua própria playlist

Salve esta música e crie sua coleção perfeita. 100% grátis, sem anúncios.

Criar minha playlist
Soniya Soniya Lyrics - A.R. Rahman | SORI Magazine